×

கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் 12ம் தேதி திருவிழா துவக்கம்

புதுக்கோட்டை, மே 6: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் முத்துமாரியம்மன கோயில் வைகாசித் தேரோட்டத் திருவிழா மே 12ம் தேதி தொடங்குகிறது. ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். இங்கு வைகாசி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அம்மனை வழிபடுவார்கள். வேண்டுதல்கள் நிறைவேறுவதால் ஏராளமானோர் நேர்த்திகடன் செலுத்து அம்மனை வழிபடுவார்கள்.

இந்நிலையில் இந்தாண்டு வைகாசி தேரோட்டத் திருவிழா நடத்துவது குறித்த கூட்டம் கோயில் வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது, வரும் 12ம் தேதி பூச்சொரிதல் விழாவும், 19ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சியும், முக்கியத் திருவிழாவான தேரோட்ட திருவிழா 27ம் தேதி நடத்துவது என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கோயில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

The post கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் 12ம் தேதி திருவிழா துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Kottamangalam Muthumariamman temple ,Pudukottai ,Vaikasith Therotta festival ,Kothamangalam ,Muthumariammana temple ,Alangudi ,Kothamangalam Muthumariamman Temple ,Vaikasi month ,Kothamangalam Muthumariamman temple festival ,
× RELATED புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!